அரியலூர் மாவட்டம், செந்துறை ஒன்றியம், செந்துறை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 1,000 பயனாளிகளுக்கு ரூ.1 கோடி மதிப்பிலான விலையில்லா வீட்டு மனைப் பட்டாக்களையும், தமிழக அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் 2,519 பயனாளிகளுக்கு ரூ.16.88 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் வழங்கினார்.
இந்நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா, ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் சார்பில் கிராம நத்தம் பகுதிகளுக்கு இணையவழியில் பட்டா மாறுதல் சேவைகள் வழங்குவதற்கான நத்தம் இணையவழி பட்டா மாறுதல் திட்டம் என்ற புதிய திட்டத்தை அன்று மயிலாடுதுறை மாவட்டத்தில் தொடங்கி வைத்தார். அதனைத்தொடர்ந்து அரியலூர் மாவட்டம், செந்துறை ஒன்றியம், செந்துறை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வருவாய்த் துறையின் சார்பில் பயனாளிகளுக்கு விலையில்லா வீட்டுமனைப் பட்டாக்கள் மற்றும் அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் நலத்திட்ட உதவிகளையும் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் வழங்கினார்.