Skip to content
Home » அரியலூர் சாலை விபத்தில் திமுக நிர்வாகி பலி..

அரியலூர் சாலை விபத்தில் திமுக நிர்வாகி பலி..

அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் அருகேயுள்ள சுத்தமல்லி கிராமத்தைச் சேர்ந்தவர் சௌந்தரராஜன்(60). விவசாயியானசௌந்தரராஜன், தா.பழூர் மேற்கு திமுக ஒன்றியச் செயலாளராகவும் பதவி வகித்து வந்தார். நேற்று மதியம் தனது இருசக்கர வாகனத்தில் வயலுக்குச் சென்று வீட்டுக்கு திரும்பும் வழியில் கோரைக்குழி அருகே வந்த போது, ​​இவரது வாகனமும், எதிரே கீழநத்தம் கிராமத்தைச் சேர்ந்த பாக்கியராஜ்(35) என்பவர் ஓட்டி வந்த இரு சக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதிக்கொண்டது. இவ்விபத்தில், இருவரும் பலத்த காயமடைந்தனர். அருகிலிருந்த பொதுமக்கள் இருவரையும் மீட்டு அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு இருவரையும் பரிசோதித்த மருத்துவர்கள் சௌந்தரராஜன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். பாக்கியராஜ் சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து குறித்து விக்கிரமங்கலம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அனைவரிடமும் அன்பாக பழக கூடிய திமுக ஒன்றிய செயலாளர் சௌந்தரராஜன் மறைவு இப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!