Skip to content
Home » அரியலூரில்……போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி….

அரியலூரில்……போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி….

உலக போதைப்பொருள் ஒழிப்பு தினம், மற்றும் மனித கடத்தலுக்கு எதிரான விழிப்புணர்வு தினம் இன்று  கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி   அரியலூர் மாவட்ட காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் போதைப்பொருள் பயன்பாடு மற்றும் மனித கடத்தலுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி நடந்தது.  தாலுகா அலுவலகம் அருகில் இருந்து  மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா  கொடியசைத்து  பேரணியையை துவக்கி வைத்தார். இப்பேரணியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.செல்வராஜ் கலந்து கொண்டார்.

அரியலூர் மாவட்டத்தில் போதைப்பொருள்கள் பயன்படுத்துவதனால் உண்டாகும் தீமைகள் குறித்து பொதுமக்கள் விழிப்புணர்வு பெறும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக இன்றையதினம் போதைப்பொருள் பயன்பாட்டுக்கு  எதிரான விழிப்புணர்வினை பொதுமக்களிடையே ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆனி மேரி ஸ்வர்ணா கொடியசைத்து துவக்கி வைத்து, பேரணியில் கலந்துகொண்டார்.

வட்டாட்சியர் அலுவலகம் அருகில் தொடங்கி, முக்கிய வீதிகள் வழியாக சென்று அரியலூர் நகராட்சி காமராஜர் திடலில் முடிவடைந்தது. பேரணியில் அரியலூர் அரசினர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணாக்கர்கள், அரியலூர் அரசு தொழிற்பயிற்சி நிலைய மாணாக்கர்கள் மற்றும் அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணாக்கர்கள் என சுமார் 750-க்கும் மேற்பட்ட மாணாக்கர்கள் கலந்துகொண்டனர்.

பேரணியில் கலந்துகொண்ட மாணாக்கர்கள் “போதையில் பயணம் விரைவில் மரணம், போதை தவிர் கல்வியால் நிமிர், போதையை மறப்போம்! ஒழிப்போம்!, போதையை விடு படிப்பை தொடு, உனக்கு தேவையா போதை ஊசி உன் குடும்பத்தை நீ யோசி” உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியும், முழக்கமிட்டும் சென்றனர்.

முன்னதாக போதை பழக்கத்திற்கு எதிரான உறுதி மொழியினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா தலைமையில் அனைவரும் ஏற்றுக்கொண்டனர்.

இப்பேரணியில், கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் விஜயராகவன், அந்தோணி ஹாரி, துணை காவல் கண்காணிப்பாளர் சங்கர்கணேஷ், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் (பொ) சாமி முத்தழகன், ஆசிரியர்கள், பள்ளி கல்லூரி மாணவ, மாணவியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!