முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தியின் 32 வது நினைவு தினம் அரியலூர் காந்தி காமராஜர் சிலை முன்பு அனுசரிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு மூத்த காங்கிரஸ் தலைவர் சீனி பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாநில பொதுக்குழு உறுப்பினர் எஸ். எம். சந்திரசேகர் காந்தி காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து, ராஜீவ் காந்தி திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்த
நிகழ்ச்சிக்கு முன்னாள் மாநில பொதுக்குழு உறுப்பினர் பூண்டி சந்தானம் முன்னிலை வகித்தார். மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் D.ரவிச்சந்திரன், மாவட்ட செயலாளர் பாலு, சிவா, நகர மகளிர் அணி முன்னாள் செயலாளர்கள் பவானி, சிவா, தலைவி லட்சுமி சங்கர், குணசேகர் 11வது வார்டு தலைவர் சின்னப்பா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி முடிவில் நகர செயலாளர் W.ஆண்டனி தாஸ் நன்றியுரை ஆற்றினார்.