அரியலூர் மாவட்டம் திருமானூர் சேர்ந்தவர் ரமேஷ். இவர் விநாயகா ஸ்டோர் என்ற கடை வைத்து நடத்தி வருகின்றார்.இந்நிலையில் இவருடைய கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக ரகசிய தகவல் வந்தது. இதனையடுத்து அரியலூர் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி வரலட்சுமி மற்றும் திருமானூர் போலீஸ் உதவி ஆய்வாளர் ரமேஷ் பாபு ஆகியோர் கடையில் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது 120 கிராமம் எடையுள்ள 4 புகையிலைப் பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதனை அடுத்து கடையை பூட்டி சீல் வைத்தார். மேலும் அரசால் தடை செய்யப்பட்ட பொருட்களை விற்பவர்கள் மீது கடுமையான சட்டம் பாயும் என தெரிவித்தார்கள்.