அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் -வாரியங்காவல் செல்லும் சாலையில் வில்லாநத்தம் கிராமம் உள்ளது இக்கிராமத்தில் இருளர்கள் மற்றும் மற்ற இனத்தைச் சேர்ந்த சுமார் 150 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பயன்படுத்தி வந்த பொது பாதையை ஒரு குடும்பத்தினர் ஆக்கிரமிப்பு செய்து வேலிவைத்து பாதையை அடைத்துள்ளனர் இதுகுறித்து கேட்ட பொது மக்களுக்கும் பாதையை அடைத்தவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சாலை
மறியலில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு சிலர் பாதையை அடைத்து வைக்கப்பட்டிருந்த வேலியை பிரிக்க சென்றபோது ஆக்கிரமிப்பாளர்களுக்கும் பொது மக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதில் கீழே விழுந்த ஒரு பெண் உட்பட மூன்று பேருக்கு காயம் ஏற்பட்டது . தகவல் அறிந்து வந்த ஆண்டிமடம் போலிசார் இரு தரப்பினரையும் சமாதானம் செய்து காயமடைந்தவர்களை ஜெயங்கொண்ட அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.