Skip to content
Home » அரியலூரில் போதைபொருட்களுக்கு எதிராக விழிப்புணர்வு பேரணி….

அரியலூரில் போதைபொருட்களுக்கு எதிராக விழிப்புணர்வு பேரணி….

அரியலூர் ரயில்வே நிலையத்தில் போதைப்பழக்கம் உடல் நலத்திற்கு தீங்கு விளைவிப்பதோடு சமுதாயத்திலும் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும், போதை பழக்கத்தை தவிர்க்க வேண்டும் என்பது குறித்த விழிப்புணர்வு பேரணி ரயில்வே காவல்துறை சார்பில் நடைபெற்றது.

அரியலூர் ரயில் நிலைய இருப்புப் பாதை காவல் நிலையம் சார்பில், போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு இயக்கம் மற்றும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
அரியலூர் இருப்பு பாதை காவல் நிலைய உதவி ஆய்வாளர் விநாயகமூர்த்தி தலைமையில், ரயில் பயணிகளிடம்
துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். முன்னதாக ரயில் நிலையத்தில் கூடியிருந்த பொது மக்களிடம், போதைப்பொருள் பழக்கம் உடல் நலத்திற்கும் சமூக நலத்திற்கும் பெரும் கேடு விளைவிக்கும். எனவே மது, புகையிலை, பான் மசாலா உள்ளிட்ட பல்வேறு போதைப் பொருள் பழக்கத்தை கைவிட வேண்டும். மேலும் ரயில் பயணத்தின் போது செல்போன் பயன்படுத்திக் கொண்டு தண்டவாளத்தை கடப்பதை தவிர்க்க

வேண்டும். தண்டவாள பாதையில் குழந்தைகள் விளையாடுவது அனுமதிக்க கூடாது. ஓடும் ரயிலில் ஏறவோ, இறங்கவோ வேண்டாம். படியில் பயணம் நொடியில் மரணம். ரயில் பயணத்தின் போது அந்நிய நபர்கள் கொடுக்கும் உணவு பொருட்களை அருந்தக்கூடாது. நகைகள் மற்றும் உடமைகளை பாதுகாப்பாக எடுத்துச் செல்ல வேண்டும் என்பது குறித்தும் இரயில்வே போலீசார் சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதனையடுத்து காரைக்குடியில் இருந்து சென்னை நோக்கி வந்த பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயிலில், போதை பழக்கத்தால் உண்டாகும் பாதிப்புகள் மற்றும் ரயில் பயணத்தில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை அரியலூர் இருப்பு பாதை காவலர்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!