அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் போதை பொருள் பற்றிய விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.பேரணியை ஜெயங்கொண்டம் எம்எல்ஏ க.சொ.க.கண்ணன் தொடங்கி வைத்தார். பேரணியானது கல்லூரியில் தொடங்கி அண்ணா சிலை நான்கு ரோடு பேருந்து நிலையம் உள்ளிட்ட முக்கிய வீதிகளின் வழியாக மீண்டும் கல்லூரிக்கு சென்று நிறைவடைந்தது.போதைப் பொருள் விழிப்புணர்வு
அடங்கிய பதாகைகளை மாணவர்கள் கையில் ஏந்தி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் புகை நமக்கு பகை, புகையிலை பகையிலை, மது குடிப்பது உடல் நலத்துக்கு கேடு உள்ளிட்ட வாசகங்களுடன் கோஷம் எழுப்பியவாறு பேரணியாக சென்றனர்.இதில் 500-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ மாணவியர்கள் கல்லூரி முதல்வர் பேராசிரியர்கள் பேராசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.