அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கங்கைகொண்ட சோழபுரத்தில் மாமன்னன் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்டு, உலக பிரசித்தி பெற்ற பிரகதீஸ்வரர் கோவில் உலகப் பிரசித்தி பெற்றது. உலகப் புரதான சின்னங்களில் ஒன்றாக விளங்கி வரும் இக்கோவிலானது தற்போது யுனெஸ்கோவால் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இப்படி வரலாற்று சிறப்புமிக்க கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் மஹா சிவராத்திரி விழாவை முன்னிட்டு, ஒவ்வொரு ஆண்டும் நாட்டியாஞ்சலி விழா வெகு விமர்சையாக நடைபெறும். அதன்படி மகா சிவராத்திரியை முன்னிட்டு முதல் காலம் 7:00 மணிக்கு தொடங்கி பிரகதீஸ்வரர் சுவாமிக்கு பால்,தயிர்,
சந்தனம், தேன் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகப் பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து மகா தீபாரதணை நடைபெற்று பக்தர்களுக்கு அருள் பிரசாதம் வழங்கப்பட்டது. தொடர்ந்து விடிய விடிய ஆறு காலம் பூஜை சுவாமிக்கு நடைபெற்றது. இரவு கண் விழிக்காமல் இருப்பதற்காக வேண்டி பல்வேறு மாவட்டங்கள், நகரங்களிலிருந்து நாட்டியக் குழுவினர் பங்கேற்ற நாட்டியாஞ்சலி பக்தர்களை வெகுவாக கவர்ந்தது. அரியலூர், தஞ்சை, கடலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் என்பது குறிப்பிடத்தக்கது.