அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகேயுள்ள கங்கைகொண்ட சோழபுரத்தை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த சோழ பேரரசின் மாமன்னன் ராஜேந்திர சோழன் பிறந்த நாள் விழா, கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயில் வளாகத்தில் கொண்டாட்டப் படுகிறது. விழாவை போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். மாவட்ட ஆட்சியர் இரத்தினசாமி விழாவிற்கு தலைமை தாங்கினார். எம் எல் ஏக்கள் க.சொ.க. கண்ணன், சின்னப்பா மற்றும் தொல்லியல் துறை, இந்து சமய அறநிலையத்துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் என
ஏராளமானோர் கலந்து கொண்டுள்ளனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வராஜ் தலைமையில் நூற்றுக்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ராஜேந்திர சோழன் பிறந்த நாளை முன்னிட்டு இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. விழாவில் பள்ளி மாணவர்கள் மற்றும் கலை குழுவினர் சார்பில் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. சுற்றுவட்டற கிராமங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் நிகழ்ச்சிகள் கலந்து கொண்டு, பெருவுடையாரை தரிசனம் செய்து வருகின்றனர்