Skip to content

அரியலூர் பெரியநாயகி அம்மன் கோவிலில் குடல் பிடுங்கி மாலை சூடுதல் திருவிழா…

  • by Authour

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் தாண்டனேரிக்கரையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற பெரியநாயகி அம்மன்கோவிலில் பாரம்பரிய மகா சிவராத்திரி திருவிழா 10 நாட்கள் நடைபெறும். இவ்வாண்டு திருவிழா கடந்த 26 ம் தேதி காப்பு கட்டுதல் மற்றும் கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் தினந்தோறும் மயான கொள்ளை, உச்சி கொப்பறை, வீரபத்திரர் படம், பகல் குறவஞ்சி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் உள்ளூர் மக்கள் குலதெய்வக்காரர்கள் மண்டகப்படியுடன் நடைபெற்று வருகிறது.

விழாவின் ஆறாம் நாளான குடல்

பிடுங்கி மாலை சூடுதல் நிகழ்வு நேற்று இரவு நடைபெற்றது. பெரியநாயகி அம்மன்
கோவிலில் இருந்து பம்பை ,உடுக்கை, மேளம் முழங்க, மங்கல இசையுடன் முக்கிய வீதி வழியாக குடல் பிடுங்கி மாலை சூடி அம்மன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

தங்கள் வேண்டுதல்களை அம்மனிடம் தெரிவித்து, பக்தர்கள் காலில் விழுந்து வணங்கி, அம்மன் அருள் பெற்றனர். வரும்  வியாழக்கிழமை பத்தாம் நாள் விழாவான மகா தீர்த்தவாரியுடன் திருவிழா நிறைவடைகிறது. இத்திருவிழாவில் உள்ளூர் மக்கள் மட்டுமல்லாமல் தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் வசிக்கும் அருள்மிகு பெரியநாயகி அம்மனை குலதெய்வமாக கொண்டுள்ள மக்கள் பெருமளவில் வருகை தந்து விழாவில் பங்கேற்று அம்மனின் அருளை பெறுவார்கள்.

error: Content is protected !!