அரியலூர் பெரம்பலூர் மாவட்ட இந்திய கட்டுமான தொழிலாளர்கள் சங்கம் சார்பில் அச்சங்கத்தின் மாவட்ட செயலாளர் துரைசாமி தலைமையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூர் பேருந்து நிலையம் அண்ணாசிலை அருகில் மாநில அளவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தில் ஓய்வூதியத்தை நிறுத்திவிட்டு தொழிலாளர்களை அச்சமூட்டும் வகையில் நடைபெறும் ஆய்வுகளை உடனடியாக நிறுத்த கேட்டும் கடந்த ஆட்சியில் வழங்கியது போல பொங்கல் தொகுப்பு வழங்க கோரியும்
மற்றும் பென்சன் ரூபாய் 3000 மாக உயர்த்தி வழங்க கோரியும் ஆர்ப்பாட்டம் செய்தனர். மேலும் மாவட்ட தலைவர் கிருஷ்ணன் மற்றும் பொருளாளர் கண்ணன் ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தினர். ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் நிர்வாகிகள் உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
