Skip to content

அரியலூர் அருகே சிவ லிங்கம் மீது சூரிய ஒளி விழும் அதிசயம்…

  • by Authour

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே கொள்ளிடம் ஆறு பாயும் காவிரி கரை ஓரத்தில் உள்ளது காரைக்குறிச்சி கிராமம். இந்த கிராமத்தில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சோழர்காலத்தில் கட்டப்பட்ட ஸ்ரீசௌந்தரநாயகி அம்பாள் சமேத பசுபதீஸ்வரர் கோவில் உள்ளது.

இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மற்றும் ஏப்ரல் மாதங்களில் 20 ஆம் தேதியில் இருந்து 25 ஆம் தேதி வரை லிங்கத்தின் மேல் சூரிய ஒளிப்படும் அபூர்வ நிகழ்வு நடைபெறும். இதனால் சூரிய பகவான்

சிவப்பெருமானை இத்தலத்தில் வழிபட்டதாக ஐதீகம். ஆகஸ்டு மற்றும் ஏப்ரல் மாதத்தில் சூரியபகவான் வலம் வந்து ஈசனை வழிபடுவதாக ஐதீகம்.
அதன்படி இன்று காலை சூரிய உதயமானபோது காலை 6:10மணியில் இருந்து 6:20 மணி வரைக்கும் சூரியனிலிருந்து வெளிப்படும் ஒளிக்கதிரானது நேரிடையாக லிங்கத்தின் மீதுபட்டு, பசுபதீஸ்வரர் பொன்னொளியில் காட்சியளித்தார். இந்த நிகழ்வானது சுமார் 10 நிமிடம் வரை நீடித்தது.
இந்த அரிய காட்சியை காண ஏராளமான பக்தர்கள் காலை முதலே கோவிலுக்கு வந்தனர். சூரிய பகவான் சிவனை வழிபடுவதை பக்தர்கள் கண்டுகளித்து வழிபட்டு சென்றனர்.
இந்த அரிய நிகழ்வானது இன்னும் ஓரிரு நாட்கள் மட்டுமே நிகழலாம் என பக்தர்கள் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!