அரியலூர் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது ஒப்பில்லாத அம்மன் கோவில் அரியலூர் ஜமீன்தர்களால் கட்டப்பட்ட கோவிலாகும். மேலும் ஒப்பிலாத அம்மன் ஜமீன்தார்கள் மற்றும் சில வம்சத்தர்களின் குலதெய்வமாகவும் விளங்கி வருகிறது. பழைமை வாய்ந்த இவ்வாலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை பௌர்ணமி அன்று ஒப்பில்லாத அம்மன் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பது வழக்கம். சித்ரா பௌர்ணமியான நேற்று இரவு ஒப்பில்லாத அம்மன் கோவிலில்,செண்டை மேளம் முழங்க, ஒப்பில்லாத
அம்மனை நூற்றுக்கணக்கான பக்தர்கள் சுமந்து வீதி உலா வந்தனர்.
பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருகை புரிந்த பக்தர்கள் தங்களது குலதெய்வ வழிபாட்டை செய்தனர்.
ஆலயத்தில் காலை முதல் இரவு வரை அன்னதானம் நடைபெற்றது.
திருவிழாவிற்கான ஏற்பாடுகளை ஜமீன்தார்கள் துரை, வெங்கடேசன் வகையறா மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்