அரியலூர் மாவட்டம் பெரிய கிருஷ்ணாபுரம் கிராமத்தில் மேல தெருவில் வசிப்பவர் செபஸ்தியார் மகன் அம்புரோஸ் (68). இவர் தனது மகள் வயிற்று பேத்தி முறையில் உள்ள ஏழாம் வகுப்பு படிக்கும் சிறுமியை பள்ளிச் சென்று வரும் பொழுது கிண்டல் செய்வதப்படி இருந்துள்ளார். மேலும் கடந்த 06.06.2023 அன்று பள்ளிக்குச் சென்று திரும்பிய சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததோடு வீட்டுக்கு சென்ற சிறுமியை பின் தொடர்ந்து சென்று பாலியல் வன்கொடுமை செய்து உள்ளார். பின்பு அச்சிறுமி தனிமையாக இருந்த பொழுது பலமுறை அம்ரோஸ் பாலியல் வன்கொடுமை செய்த காரணமாக அச்சிறுமி 11 வார கர்ப்பமாகியுள்ளார். இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஜெயங்கொண்டம் மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் சுமதி புகாரை பதிவு செய்து அம்ப்ரோஸை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தார். இவ்வழக்கின் விசாரணை அரியலூர் மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்றது. டிஎன்ஏ பரிசோதனையில் சிறுமியின் கற்பத்திற்கு அம்ப்ரோஸ் காரணம் என்பது உறுதி செய்யப்பட்டது. இவ்வழக்கில் இன்று தீர்ப்பளித்த மகிளா நீதிமன்ற நீதிபதி செல்வம், குற்றம் சாட்டப்பட்ட அம்ரோசுக்கு ஆயுள் தண்டனையும் 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு சார்பில் 4 லட்ச ரூபாய் நிவாரண உதவி வழங்கவும் தனது உத்தரவில் தெரிவித்துள்ளார். இதனை எடுத்து அம்புரோஸ் போலீஸ் பாதுகாப்புடன் திருச்சி மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அரியலூர்.. சிறுமியை கர்ப்பமாக்கிய முதியவருக்கு ஆயுள் தண்டனை…
- by Authour
