அரியலூர் மாவட்டம், ஸ்ரீபுரந்தான் கிராமத்தில் உள்ள பெரிய ஏரியில் அப்பகுதி பொதுமக்கள் குளிக்க சென்றனர். அப்போது ஏரியில் அடையாளம் தெரியாது சடலம் மிதப்பதைக் கண்டு அதிர்ச்சடைந்தனர் இது குறித்து பொதுமக்கள் விக்கிரமங்கலம் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார்
பொதுமக்களின் உதவியுடன் ஏரியில் மிதந்த சடலத்தை மீட்டு விசாரணை செய்தனர். விசாரணையில் 80 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் என்பது தெரிய வந்தது மேலும் உயிரிழந்தவர் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர் மேலும் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு போலிசார் அனுப்பி வைத்தனர்.