அரியலூர் பேருந்து நிலையம் அருகில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அரசியல் சட்டம் வழங்கிய கருத்துரிமை- போராட்ட உரிமைகளை பறிக்கும் வகையில் ஒன்றிய பாஜக மோடி அரசு கொண்டுவந்துள்ள மூன்று குற்றவியல் சட்ட திருத்த நகலை எரிக்கும் போராட்டம் நடைபெற்றது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முன்னாள் மாவட்டத் துணைச் செயலாளர் T. தண்டபாணி தலைமை தாங்கினார். போராட்டத்தில், மாவட்டத் துணைச் செயலாளர் ப. கலியபெருமாள், மாவட்ட குழு G.ஆறுமுகம், ஜெயங்கொண்டம் ஒன்றியம் s.ஆனந்தன், அரியலூர் ஒன்றிய செயலாளர் து. பாண்டியன், அரியலூர் நகர கிளை ந. கோவிந்தசாமி, செந்துறை ஒன்றியம் K.சிவக்குமார்,
ஆண்டிமடம் ஒன்றியம் சு. கவர்னர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். குற்றவியல் சட்ட திருத்தங்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து தலைவர்கள் உரையாற்றிய பின், குற்றவியல் சட்ட திருத்த நகலை கையில் எடுத்து எரிக்க முயன்றனர். அப்போது அரியலூர் நகர காவல்துறையினர், நகலை எரிக்க விடாமல் பறித்து விட்டனர். போராட்டத்தில் 75க்கும் மேற்பட்ட கம்யூனிஸ்ட் கட்சியினர் கலந்து கொண்டனர்.