அரியலூர் மாவட்டம், கீழப்பழுவூர் அருகே உள்ள கரைவெட்டி பறவைகள் சரணாலயத்தில்
திருச்சி மத்திய மண்டல அஞ்சல்துறை தலைவர் நிர்மலா தேவி கலந்து கொண்டு அண்மையில் ராம்சார் சர்வதேச அங்கீகாரம் பெற்ற நிலையில் சிறப்பு முத்திரையுடன் கூடிய கரைவெட்டி பறவைகள் சரணாலய அஞ்சலுறை வெளியிட முதல் பிரதியை வன அலுவலர் இளங்கோவன் பெற்றுக் கொண்டார். இந்நிகழ்வில் அஞ்சல்துறையைச் சேர்ந்த கி.கலைவாணி உதவி இயக்குநர் கிருஷ்ணமூர்த்தி திருச்சி முதுநிலை கோட்ட கண்காணிப்பாளர் மற்றும் அஞ்சல்துறையினர் கரைவெட்டி கிராம மக்கள் தட்டாஞ்சாவடி கிராம மக்கள் இயற்கை ஆர்வலர்கள் வனத்துறையைச் சேர்ந்த பலரும் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் மாவட்ட வன அலுவலர் இளங்கோவன் கரைவெட்டி ஊராட்சி மன்ற தலைவர் கணேசன் கரைவெட்டி ஏரி பாதுகாப்புக் குழு ஒருங்கிணைப்பாளர் தங்க சண்முக சுந்தரம், கிருஷ்ணகுமார், கணேசன் வடிவேல் மும்மூர்த்தி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
