அரியலூர் மாவட்டம், அஸ்தினாபுரம் கிராமத்தில் மலேசியாவில் உள்ள முருகன் சிலை போன்று பிரமாண்ட முருகன் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இக்கோவிலில் தைப்பூசத்தை முன்னிட்டு பால் காவடி திருவிழா மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது. முருகன் கோவிலை சுற்றி உள்ள கிராம மக்கள் இன்றையநாள் முழுவதும் பூச
நட்சத்திரம் இருப்பதால் காலை முதல் மாலை வரை முருகனை நினைந்து உபவாசம் இருந்து முருகனை தரிசித்து, வழிபாடு செய்து வருகின்றனர். இன்று காலை மதியம் என இருவேளையும் பால், பழம் மட்டுமே அருந்தி விரதம் இருந்து முருகனை வழிபடும் சமயத்தில் முருக வேலையும் சேர்த்து வழிபாடு செய்து கொண்டாடினர். காவடிகள் மற்றும் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்து முருகனைக்கு அபிஷேகம் செய்து வழிபட்டு சென்றனர்.