அரியலூர் மாவட்டம் கோவில் எசனை கிராமத்தை சேர்ந்தவர் மனோகரன். இவருக்கும் அதே கிராமத்தைச் சேர்ந்த லாரி டிரைவரான விஜயகாந்த் என்பவருக்கும் முன் விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று மனோகரன் அப்பகுதியில் உள்ள கோவிலுக்கு அருகில் உள்ள திட்டு போதையில் படுத்து இருந்தார். அப்போது அங்கு வந்த விஜயகாந்த் மனோகரனை லாரியின் டயர் மாட்ட பயன்படுத்தும் லிவரால் தலையில் அடித்ததில் சம்பவ இடத்திலேயே மனோகரன் உயிரிழந்தார். சம்பவம் குறித்து வெங்கனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை. செய்து வருகின்றனர் தலைமறைவான விஜயகாந்தை போலீசார் தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
