அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள மேலகுடிகாடு கிராமத்தில் இருந்து நடுவலூர் கிராமத்திற்கு மணிவண்ணன் என்பவர் 60 வைக்கோல் கட்டுகளை டிராக்டரில் ஏற்றிச்சென்றுள்ளார். தென்கச்சி பெருமாள் நத்தம் பகுதியில் உள்ள வாய்க்கால் கரையில் வரும் போது, மின் கம்பி உரசியதில் வைக்கோல் தீப்பற்றி எரிந்தது.
அருகில் இருந்தவர்கள் தீயை அணைக்க வாய்க்காலில் இருந்து தண்ணீரை ஊற்றி போராடியும், தீயை அணைக்க முடியவில்லை. தீ மளமளவென பரவி வைக்கோல் கட்டுகள் எரிந்து சேதமாகியது. இந்த தீ விபத்தில் சுமார் 6 ஆயிரம் மதிப்புள்ள வைக்கோல் கட்டுகள் எரிந்து சாம்பல் ஆனது. மேலும் டிப்பரில் உள்ள 4 டயர்களும் வெடித்து எரிந்தது. இதன் மதிப்பு சுமார் 25 ஆயிரம் ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது. வைக்கோல் எரிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.