பொங்கல் பண்டிகையின் நான்காம் நாளான காணும் பொங்கல் மற்றும் கரி நாளான இன்று, அரியலூர் நகரில் உள்ள காந்தி மார்க்கெட்டில் இறைச்சி கடைகளில் பொதுமக்கள் இறைச்சி வாங்க அதிக ஆர்வம் காட்டினர். இதனால் ஆடு,கோழி,மீன் உள்ளிட்ட இறைச்சி கடைகளில், அதிகாலை முதலே அசைவ பிரியர்களின் கூட்டம்
அலைமோதியது. திருவள்ளுவர் தினமான நேற்று தமிழகம் முழுவதும் இறைச்சி விற்பனைக்கு தடை செய்யப்பட்டிருந்த நிலையில். இன்று கரி நாளை முன்னிட்டு விற்பனை அமோகமாக நடைபெற்றது.
மேலும், மீன் கடைகளில்,சாலமன்,கடல் பாறை,நண்டு, இறால் உள்ளிட்ட பல்வேறு வகையான மீன் வகைகள் விற்பனைக்கு வந்திருந்தன.கூட்டத்தை பொருட்படுத்தாமல்,பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருந்து தங்களுக்கு தேவையான இறைச்சி மற்றும் மீன் வகைகளை வாங்கி சென்றனர். இதனால் இறைச்சி விலை மற்ற நாட்களை காட்டிலும் சற்று அதிகமாக காணப்பட்டாலும் விற்பனை அதிகரித்து காணப்பட்டது. இதனால் இறைச்சி கடைக்காரர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.