அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே உள்ள கோவிந்த புத்தூர் கிராமத்தில் பராந்தக சோழனால் கட்டப்பட்டு உத்தம சோழனால் புனரமைக்கப்பட்டது. சோழ அரசில் முதல் செங்கற்களால் ஆன கோவில் இந்த கோவில் என்று வரலாறு கூறுகிறது. இது திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் பாடல் பெற்ற தலமாக இந்த தலம் விளங்குகிறது. பசு லிங்கத்தின் மீது தானாக பால் கறந்த சுயம்பு லிங்கமாக காட்சி அளித்ததாகவும், சுமார் 5 ஆயிரம்
வருடங்களுக்கு முன்பு அர்ஜூனன் இந்த தலத்திற்கு வந்து பூஜை செய்ததாகவும் வரலாற்றில் கூறுப்படுகிறது.
சுமார் 100 ஆண்டுகளுக்கு பிறகு கங்கா ஜடேஸ்வரர் கோவில்களில் மங்களாம்பிகை சமேத ஶ்ரீ கங்கா ஜடேஸ்வரருக்கு திருக்கல்யாணம் வைபவம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இந்து அறநிலையத்துறை செயல் அலுவலர் சரவணன் உட்பட சுற்று வட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.