இந்திய தண்டனைச் சட்டம் , குற்றவியல் நடைமுறைச் சட்டம், இந்திய சாட்சியங்கள் சட்டம் உள்ளிட்ட பழைய சட்டங்களுக்குப் பதிலாக புதிய மூன்று குற்றவியல் சட்டங்களை மத்திய அரசு கடந்த ஒன்றாம் தேதி முதல் நடைமுறைப்படுத்தியுள்ளது.
இச்சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதை கண்டித்தும், இச்சட்டங்களை வாபஸ் பெற வலியுறுத்தியும், அரியலூர் வழக்கறிஞர்கள் ஒன்றாம் தேதி முதல் நீதிமன்ற பணிகளை புறக்கணித்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
நான்காவது நாளான இன்று அரியலூர் பிஎஸ்என்எல் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் புதிய மூன்று குற்றவியல் சட்டங்களை மத்திய அரசு உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். போராட்டத்தில் அரியலூர் மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் மனோகரன் தலைமையில் திரளான வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.