Skip to content
Home » அரியலூர்……சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு வழக்கறிஞர்கள் போராட்டம்

அரியலூர்……சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு வழக்கறிஞர்கள் போராட்டம்

இந்திய தண்டனைச் சட்டம் , குற்றவியல் நடைமுறைச் சட்டம், இந்திய சாட்சியங்கள் சட்டம் உள்ளிட்ட பழைய சட்டங்களுக்குப் பதிலாக புதிய மூன்று குற்றவியல் சட்டங்களை மத்திய அரசு கடந்த ஒன்றாம் தேதி முதல் நடைமுறைப்படுத்தியுள்ளது. இச்சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதை கண்டித்தும், இச்சட்டங்களை வாபஸ் பெற வலியுறுத்தியும் அரியலூர் மாவட்ட வழக்கறிஞர்கள் ஒன்றாம் தேதி முதல் நீதிமன்ற பணிகளை புறக்கணித்து, பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

மூன்றாவது நாளான இன்று, திருச்சி சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் மனகெதியில் அமைந்துள்ள சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது இச்சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுவதால் வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டப்பட்டவர்கள், சாலையோர வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் பாதிக்கப்படும் வகையில் இச்சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இச்சட்டங்களை உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். போராட்டத்தில் அரியலூர் மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் மனோகரன் தலைமையில் திரளான வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!