அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள அண்ணங்காரன்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜ். இவர் கால் ஊனமுற்ற நிலையில் சிறிது மனநலம் பாதிக்கப்பட்டவராக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று மாலை கொள்ளிடம் ஆற்றில் குளிக்க சென்ற நிலையில் மாயமானார். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ
இடத்திற்கு வந்த தா.பழூர் காவல்துறையினர் மற்றும் ஜெயங்கொண்டம் தீயணைப்புத் துறையினர் செல்வராஜை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.