கேலோ இந்தியா இளைஞர் இளைஞர் விளையாட்டு போட்டிகள் தமிழ்நாட்டில் உள்ள சென்னை கோவை மதுரை மற்றும் திருச்சி ஆகிய நான்கு நகரங்களில் வருகின்ற 19ந்தேதி முதல் 31ம் தேதி வரை நடைபெற உள்ளது. அதற்கான விழிப்புணர்வு மாரத்தான் போட்டியை மாவட்ட ஆட்சியர் ஆனி மேரி ஸ்வர்ணா கொடியசைத்து தொடங்கி வைத்தார். அரியலூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் தொடங்கிய இப்பாட்டியில் ஆண்களுக்கு
10 கிலோ மீட்டர் அளவிலும் பெண்களுக்கு 5 கிலோ மீட்டர் அளவிலும் நடைபெற்றது. இப்போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற முதல் 10 மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இந்த விழிப்புணர்வு மாரத்தான் போட்டியில் சுமார் 300க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். இதில் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் அரசு அலுவலர்கள் என பலர் பங்கேற்றனர் .