Skip to content
Home » அரியலூர்.. கதண்டு கடித்த 22 பேருக்கு சிகிச்சை… 100 நாள் வேலைக்கு சென்றவர்கள் பாதிப்பு…

அரியலூர்.. கதண்டு கடித்த 22 பேருக்கு சிகிச்சை… 100 நாள் வேலைக்கு சென்றவர்கள் பாதிப்பு…

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே வஞ்சனாபுரம் பெரிய ஏரி கரையில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில், வேலை பார்த்துக் கொண்டிருந்தவர்களை அங்குள்ள மரத்திலிருந்து கதண்டுகள் படையெடுத்து வந்து கடித்தது.
இதில் சுமார் 22 பேருக்கு உடலில் அங்கங்கே வீக்கம் ஏற்பட்டு வலி உண்டாகியது. கதண்டு கடித்த அனைவரும் 108 ஆம்புலன்ஸ் மூலம் செந்துறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டனர். அதில் மேல் சிகிச்சைக்காக ஆறுமுகம், ஆதிமூலம்,செல்லம்மா, தனக்கோடி ஆகிய நான்கு பேர், அரியலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. சிகிச்சை பெற்று வருபர்களை செந்துறை வட்டாட்சியர் நேரில் சந்தித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!