Skip to content

ஜெயங்கொண்டம் அருகே மின் கம்பத்தில் மின்சாரம் பாய்ந்து கேங்மேன் பலி..

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே அர்த்தனேரி கிராமத்தில் இன்று காலை 9 மணி முதல் மின்சார பராமரிப்பு பணி நடைபெற்றது. அப்போது மின்கம்பத்தில் ஏற்படும் பழுதுகளை சரி செய்யவும் அடிக்கடி ட்ரிப் ஆவதால் அதனை சரி செய்யும் பொருட்டு மின் ஊழியர்கள் அப்பகுதியில் மின் கம்பத்தில் வரும் மரக்கிளைகளை மின்சாரத்தை நிறுத்திவிட்டு வெட்டி அப்புறப்படுத்தினர். இந்நிலையில் உத்திரக்குடி பஸ் நிறுத்தம் அருகே மின் மோட்டாருக்கு செல்லும் மின்கம்பத்தில் மின் கம்பி இணைப்பு விடுபட்டதை இணைக்கும் பொருட்டு அந்த மின்கம்பத்தில் ஏறி பழுது நீக்கிய பெரம்பலூர் மாவட்டம் எசனை கிராமம் பி.சி காலணியை சேர்ந்த தங்கராசு மகனும், ஜெயங்கொண்டம் தெற்கு மின்சார வாரிய கேங்மேனான ராஜாராம் என்பவர் கை முகங்களில் மின்சாரம் பாய்ந்து முகம் கை கருகிய நிலையில் கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!