அரியலூர் – அண்ணல் அம்பேத்காருக்கு காவி அணிவித்து சுவரொட்டி ஒட்டிய இந்து மக்கள் கட்சியை கண்டித்து அரியலூர் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம். அண்ணல் அம்பேத்கரை காவி சட்டை, திருநீறு பட்டை, குங்கும பொட்டு உருவத்துடன் சித்தரித்து அர்ஜூன் சம்பத்தின் இந்து மக்கள் கட்சியினர் ஒட்டியிருந்த சர்ச்சை போஸ்டர்கள் கும்பகோணத்தில் அகற்றப்பட்டன. மேலும் அம்பேத்கரை இழிவுபடுத்தும் வகையில் சுவரொட்டி ஒட்டிய இந்து மக்கள் கட்சியை கண்டித்து அரியலூர் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் சார்பில் அரியலூர் பேருந்து நிலையத்தின் முன்னே மாவட்ட செயலாளர் செல்வநம்பி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம். நடைபெற்றது. அப்போது அக்கட்சியின் மாநில செயலாளர் குணவழகன் மற்றும் மண்டல் அமைப்பு செயலாளர் கிட்டு கண்டண உரையாற்றினார்கள். இந்நிகழ்ச்சியில் அக்கட்சியின் மாவட்ட நகர பொறுப்பாளர்கள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.