Skip to content

அரியலூர் நகர கடைகளுக்கு பொருட்கள் இறக்கும் கனரக வாகனங்களுக்கு நேர கட்டுப்பாடு…

அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.தீபக் சிவாச் I.P.S உத்தரவின் பேரில், அரியலூர் நகர போக்குவரத்து காவல் ஆய்வாளர் கார்த்திகேயன் தலைமையில், அரியலூர் நகரில் உள்ள வணிகர் சங்க பிரதிநிதிகளையும், முக்கிய கடை உரிமையாளர்களையும், கடைகளுக்கு பொருள்களை இறக்கும் லாரி சர்வீஸ் உரிமையாளர்களையும் அழைத்து கலந்தாய்வு கூட்டம் நடத்தப்பட்டது. அரியலூர் நகருக்குள் கனரக வாகனங்கள் மூலம் கடைகளுக்கு பொருள்களை காலை 7:00 மணி முதல் 11 மணி வரையிலும் மதியம் 3 மணி முதல் இரவு 10:00 மணி வரையிலும் அனுமதி இல்லை என அறிவுறுத்தப்பட்டது . இதனை அனைத்து வணிகர் சங்க பிரதிநிதிகளும் லாரி சர்வீஸ் உரிமையாளர்களும் ஏற்றுக்கொண்டு அந்த நேரத்தில் அரியலூர் நகருக்குள் கனரக வாகனங்கள் வராது என உறுதி அளித்தார்கள் . இந்த கலந்தாய்வு கூட்டத்தில் APN, கண்ணன் ஜவுளிக்கடை உரிமையாளர்களும், கோவை கிருஷ்ணா ,அஸ்வின் பேக்கரி உரிமையாளர்களும் ,தண்டபாணி எஸ் சி எஸ் விமலா ஜுவல்லரி உரிமையாளர்களும் மற்றும் பல கடை உரிமையாளர்களும் கலந்து கொண்டனர். அரியலூர் நகருக்குள் கடைகளுக்கு தேவையான பொருட்களை சேர்க்கும் வேலையை செய்யும் மகாலட்சுமி லாரி சர்வீஸ், எஸ் எல் எஸ் லாரி சர்வீஸ் ,ராஜேந்திரன் லாரி சர்வீஸ் ஆகியோரும் கலந்தாய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.