Skip to content
Home » அரியலூர் அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில்… மாணவர் சேர்க்கை 30ம் தேதி வரை நீடிப்பு…

அரியலூர் அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில்… மாணவர் சேர்க்கை 30ம் தேதி வரை நீடிப்பு…

  • by Senthil

2024- ஆம் ஆண்டில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர நேரடி சேர்க்கை (Spot Admission) நடைபெறும் கால அவகாசம் 30.10.2024 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

பயிற்சியில் சேர விரும்புபவர் தங்களது அசல் கல்வி சான்றிதழ்களுடன் நேரில் வரவும். ஏற்கனவே பயிற்சியாளர்கள் சேர்க்கை நடைபெற்றதில் மீதமுள்ள காலியிடங்களுக்கு மட்டும் முதலில் வருபவருக்கு முன்னுரிமை அடிப்படையில் நேரடி சேர்க்கை நடைபெறுகிறது.

கல்வித்தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி, பத்தாம் வகுப்பு தேர்ச்சி (ம) 12-ம் வகுப்பு தேர்ச்சி / தோல்வி. விண்ணப்பக்கட்டணம்: விண்ணப்ப கட்டணத் தொகை – ரூ.50/-, சேர்க்கை கட்டணம்: ஒரு வருடம் தொழிற்பிரிவு பயிற்சி கட்டணம் – ரூ.185/-, இரண்டு வருடம் தொழிற்பிரிவு பயிற்சி கட்டணம் – ரூ.195/-. நேரடி சேர்க்கை (Spot Admission) – விண்ணப்பிக்க கடைசி நாள் -30.10.2024

மேலும் விவரங்களுக்கு 1.அரசு தொழிற்பயிற்சி நிலையம், அரியலூர் – 9499055877, 04329-228408 2. அரசு தொழிற் பயிற்சி நிலையம், ஆண்டிமடம் – 9499055879 என்ற தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!