அரியலூர் அரசு கலைக் கல்லூரி முதல்வர் ஸ்ரீதரன் விடுத்துள்ள செய்தி குறிப்பில், 2024-2025 ஆம் கல்வி ஆண்டின் இளநிலை(UG) பட்டப் படிப்புகளுக்கான (B.A./B.Sc./B.Com.) மாணவர் சேர்க்கையின் இறுதி கட்ட பொதுக்கலந்தாய்வு இன்று 23-07-2024 முதல் 25-07-2024 வரை தினமும் காலை 9.30 மணியளவில் நடைபெற உள்ளது. ஏற்கனவே சேர்க்கை வேண்டி இணையதளத்தின் மூலம் விண்ணப்பித்தவர்கள் மற்றும் இதுநாள் வரை விண்ணப்பிக்காதவர்கள் இந்த கலந்தாய்வில் கலந்துக் கொள்ளலாம். மேலும், சந்தேகங்களுக்கு கல்லூரி தொலைப்பேசியினை 04329-222050 தொடர்பு கொள்ளலாம்.
சேர்க்கைக் கலந்தாய்விற்கு வரும் விண்ணப்பதாரர்கள் பின்வரும் ஆவணங்களின் அசல் மற்றும் 3 நகல்கள் கொண்டு வர வேண்டும்: மாற்றுச்சான்றிதழ், சாதிச்சான்றிதழ், 10,11,&12 ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியல்கள், ஆதார் அட்டை, வங்கி கணக்குப் புத்தகம் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம்-5. சேர்க்கைக்கு தெரிவு செய்யப்பெற்றவர்கள் அன்றைய தினமே கல்லூரிக் கட்டணத்தை செலுத்தவேண்டும். கலந்தாய்வில் காலதாமதமாக கலந்து கொள்பவர்களுக்கு சேர்க்கைக்கான இடம் காலியிருந்தால் மட்டுமே வழங்கப்படும் என கல்லூரி முதல்வர் ஸ்ரீதரன் அறிவித்துள்ளார்.