அரியலூர் அரசு சிமெண்ட் ஆலைக்கு சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு, சுண்ணாம்புக்கல் சுரங்கத்திற்காக பல்வேறு கிராமங்களில் குறைந்த விலைக்கு நிலம் கையகப்படுத்தப்பட்டது. அப்பொழுது குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வழங்கப்படும், உரிய இழப்பீடு வழங்கப்படும் என கூறி நிலத்தை கையகப்படுத்தினார். ஆனால் இதுவரை நிலம் கொடுத்தோருக்கு உரிய இழப்பீடோ, குடும்பத்தில் ஒருவருக்கு நிரந்தர வேலை வாய்ப்போ வழங்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அரசு சிமெண்ட் ஆலைக்கு நிலம் கொடுத்தோர், அரியலூர் அண்ணா சிலை அருகே
குடும்பத்துடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் நிலம் கொடுத்தோர் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வழங்க வேண்டும். வாரிசு அடிப்படையில் வேலை வழங்க வேண்டும். ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்யப்பட்டவர்களுக்கு, ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ளவாறு ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.