அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் இரத்தினசாமி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்து கொண்ட இந்திய விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு மாநில செயலாளர் வாரணவாசி ராஜேந்திரன் விவசாயிகளின் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார்.
கரும்பு விவசாயிகளுக்கு மாநில அரசாங்கம் வழங்கும் ஊக்கத்தொகை விவசாயிகளுக்கு தீபாவளி பண்டிகைக்கு முன்பாக கிடைக்க மாவட்ட நிர்வாகமும் சர்க்கரை ஆலை நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அரியலூர் மாவட்டத்தில் கரும்பு சாகுபடி செய்யும் ஆண்டிமடம், தா.பலூர் பகுதிகளை அரியலூர் மாவட்டத்தில் இயங்கும் கோத்தாரி சர்க்கரை ஆலையில் இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்கும் பொழுது டிராக்டரில் மட்டும் வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்கப்படுகிறது லாரிகளிலும் வண்டல் மண் எடுக்க மாவட்ட நிர்வாகம் அனுமதிக்க வேண்டும். புள்ளம்பாடி வாய்க்கால் கரைவெட்டி ஏரியிலிருந்து பாசனம் பெறும் 1 நம்பர் வாய்க்கால், 2 நம்பர் வாய்க்கால், 3 நம்பர் வாய்க்கால் பள்ளம்பாடி வாய்க்கால் உள்ளிட்டவர்களை போர்க்கால அடிப்படையில் தூர்வார வேண்டும். இல்லாவிட்டால் சரியான அளவில் பாசனமும் செய்ய முடியாது. மழை பெய்யும் பொழுது தண்ணீர் வடிவதற்கான வழியும் இல்லாமல் நடவு செய்யப்பட்டுள்ள பயிர்கள் அழிவதற்கான சூழ்நிலைகளும் உள்ளது. உடனே மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அரியலூர் நகராட்சியில் அமைக்கப்பட்டுள்ள பாதாள சாக்கடை மூலம் சேகரிக்கப்படும் கழிவு நீர் கீழப்பழுவூர் அருகே சுத்திகரிக்கப்படுகிறது. அந்த நீர் அரியலூரில் இருந்து கீழப்பலூர் செல்லும் எட்டு கிலோமீட்டர் சாலையில் கழிவு நீரும் செல்லுகிறது கொள்ளிடம் கூட்டுக் குடிநீரும் செல்லுகிறது .
கழிவு நீரில் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு அது கொள்ளிடம் கூட்டு குடி நீரோடு கலந்து அருகாமையில் உள்ள மக்கள் குடியிருக்கும் பகுதிகள் வழியாக ஏரிகளில் கலக்கிறது. இதனால் சுகாதார கேடு ஏற்படுகிறது அதனையும் சரி செய்ய வேண்டும் என்று இந்திய விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு மாநில செயலாளர்
வாரணவாசி ராசேந்திரன் பேசினார்