அரியலூர் மாவட்டம் காசாங்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பசுமை குமார். இவர் கடந்த 4 ஆம் தேதி ஆட்டுக்கு தழை ஒடிக்க மரத்தில் ஏரி உள்ளார். அப்பொழுது மரத்தில் இருந்து நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார்.
இதில் தலையில் கபாலம் உடைந்து மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். அவரை மீட்டு தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதில் பசுமை குமார் மூளை சாவு அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அவரது குடும்பத்தினர் அனுமதியுடன் சென்னை, கோவை, திருநெல்வேலி, மதுரை, சேலம், தூத்துக்குடி,
கன்னியாகுமரி ,தர்மபுரி ஆகிய தலைமை மருத்துவமனைகளில் உயிருக்கு போராடிய 8 பேருக்கு இதயம், கல்லீரல், கருவிழி, எலும்பு, தோல், சிறுநீரகம் உள்ளிட்டவற்றை தானமாக வழங்கியுள்ளார்.
பசுமை குமாரின் இறப்பு அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உடல் உறுப்பு தானம் செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.