அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் பஸ் ஸ்டாண்ட் அருகே ஜெயங்கொண்டம் கிராம நிர்வாக அலுவலர் வேல்முருகன் மற்றும் அவரது உதவியாளர் வைத்தியநாதன் ஆகிய இருவரும் சென்று கொண்டிருந்த போது அவ்வழியாக வந்த டிராக்டர்களை நிறுத்தச் சொல்லும் போது டிராக்டர்களை நிறுத்திவிட்டு டிராக்டர் டிரைவர்கள்
தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் வேல்முருகன் புகார் அளித்தார். புகாரியின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணையில் டிராக்டர்களை ஓட்டி வந்தது இலையூர் கௌதமன், இலையூர் கண்டியங்கொல்லையை சேர்ந்த ராஜேஷ், மனக்கரையை சேர்ந்த தினேஷ்குமார் ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்து,மூன்று டிராக்டர்களையும் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.