மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு நாளை நடைபெறுகிறது. அரியலூர் மாவட்டத்தில் ஐந்து இடங்களில் மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர். அரியலூர் ராஜாஜி நகரில் உள்ள மான்போர்ட் மெட்ரிகுலேஷன் பள்ளியில் 648 மாணவர்களும், வெங்கட கிருஷ்ணாபுரத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா பொதுப்பள்ளியில் 552 மாணவர்களும், தாமரைக் குளம் ராம்கோ வித்யா மந்திர் மேல்நிலைப் பள்ளியில் 432 மாணவர்களும், ரெட்டிப்பாளையம் ஆதித்ய பிர்லா பொதுப்பள்ளியில் 108 மாணவர்களும், கருப்பூர் விநாயகா பொது பள்ளியில் 624 மாணவர்களும் சேர்த்து, மொத்தம் 2364 மாணவர்கள் நாளை நீட் தேர்வு எழுதுகின்றனர். இத்தேர்வுக்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் கல்வித்துறை மற்றும் காவல் துறையினர் இணைந்து ஏற்பாடுகளை செய்து வருகின்றனர் அரசு போக்குவரத்து துறை சார்பில் அரியலூர் அண்ணா சிலையில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தேர்வு எழுதும் மையங்களில் மாணவர்களுக்கு தேவையான குடிநீர், மின்சார வசதி மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்கான அனைத்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.