Skip to content
Home » அரியலூர் அருகே வைத்தியநாத கோவிலில் நந்தியம் பெருமான் திருக்கல்யாணம்…

அரியலூர் அருகே வைத்தியநாத கோவிலில் நந்தியம் பெருமான் திருக்கல்யாணம்…

  • by Senthil

அரியலூர் மாவட்டம் திருமழபாடியில் காசியைப் போல் கொள்ளிடம் ஆறு தெற்கிலிருந்து வடக்கு நோக்கி ஓடும் கொள்ளிடம் ஆறு மீண்டும் கிழக்கு நோக்கி செல்கிறது. இவ்வாறு சிறப்பு வாய்ந்த கொள்ளிடம் ஆற்றின் மேற்கு கரையில் வரலாற்று சிறப்பு பெற்ற சுந்தராம்பிகை சமேத வைத்தியநாத சாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் புனர்பூசம் நட்சத்திரம் அன்று கோயில் நுழைவாயில் அருகில் உள்ள மேடையில் திரு நந்தியம் பெருமானுக்கும் சுயஸாம்பிகை தேவிக்கும் திருக்கல்யாண உற்சவம் வெகு விமர்சையாக நடக்கும்.. சிவனே முன் நின்று நந்தியம் பெருமானுக்கும் சுயசாம்பிகை தேவியாருக்கும் திருமணம் நடத்தி வைத்ததாக கூறப்படும் புனித தளத்தில் இந்த ஆண்டிற்கான விழா இன்று வெகு விமர்சையாக நடந்தது.

இதையொட்டி கோயில் அருகில் உள்ள திருமண மேடையில் திரு நந்திய பெரும்பானூக்கும்.சுயஸாம்பிகை தேவிக்கும் யாக பூஜைகள் நடத்தி மஞ்சள், சந்தனம், பால்,தயிர், பஞ்சாமிர்தம் ,தேன், இளநீர், பழச்சாறு உட்பட

பல்வேறு திரவிய பொடிகள் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து சுவாமியை ஊஞ்சலில் வைத்து நந்தியம் பெருமான் வெள்ளி தலை பாகை சூடி செங்கோலுடன் தெய்வங்களுக்கு பட்டாடைகள் உடைத்தி மலர்மாலைகள் அலங்கரிக்கப்பட்டது. இதனையடுத்து கெட்டி மேளம், மங்கல வாத்தியத்துடன் வேத மந்திரங்கள் முழங்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் நந்தியம் பெருமானுக்கும் சுயசாம்பிகை தேவியாருக்கும் வெகு விமர்சையாக நடைபெற்றது. நந்தி கல்யாணம்‌ பார்த்தால் முந்தி திருமணம் நடைபெறும் என்பது ஐதீகம். திருமண நிகழ்ச்சியில் தமிழகம் முழுவதும் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!