அரியலூர் மாவட்ட கழக செயற்குழு கூட்டம், கழக சட்டத்திட்ட திருத்தகுழு இணைச் செயலாளர் சுபா.சந்திரசேகர் தலைமையில் மாவட்ட கழக அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் கலந்து கொண்டு எதிர்வருகின்ற பிப்ரவரி-26 அன்று “இல்லம் தோறும் ஸ்டாலின் குரல்” என்ற தலைப்பில் திண்ணை பிரச்சாரம் துவங்குது குறித்தும், மற்றும் ஆக்க பணிகள் குறித்தும் கலந்தாலோசித்தார்.
நிகழ்ச்சியில் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன், கழக கொள்கை பரப்பு துணை செயலாளர் ச.அ.பெருநற்கிள்ளி, மாநில செயற்குழு உறுப்பினர் எம்.பி.பாலசுப்ரமணியன் மற்றும் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர பேரூர், கிளை கழக செயலாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.