அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே தொடர்ந்து பல்வேறு இளம் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பொக்களின் ஆபரேட்டரை போலீசார் கைது செய்தனர்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள தண்டலை கிராமம் தேரடி பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் ஞானசேகர் (35) இவர் பொக்லைன் ஆபரேட்டராக உள்ளார். இந்த நிலையில் கடந்த கடந்த 2021ம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது தொடர்பான வழக்கில் அவர் கைது செய்யப்பட்டார். பின்னர் சிறையில் இருந்து வெளியே வந்த அவர் வேறொரு பெண்ணிடமும் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். அது தொடர்பான வழக்கிலும் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது சிறையில் இருந்து வெளியே வந்த ஞானசேகர் பாலியல் தொல்லை கொடுத்த முதல் பெண்ணிடமே மீண்டும் தகராறு செய்து மிரட்டி பாலியல் தொந்தரவு செய்துள்ளார். பின்னர் அவரிடமிருந்து தப்பி வந்த அந்த பெண் ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, தொடர்ந்து பாலியல் குற்றச்செயல்களில் ஈடுபட்ட ஞானசேகரை 3-வது முறையாக மீண்டும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.