அரியலூர் மாவட்டத்தில் ONGC-எரிவாயு ஆழ்துழை கிணறு அமைக்கும் பணியை உடனடியாக தடைசெய்ய வலியுறுத்தி மத்திய, மாநில அரசுக்களை கண்டித்து பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா அருகில் இன்று கன்டண ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் ஒன்றிய குழு பெருந்தலைவர்
காடுவெட்டி – ரவி தலைமை தாங்கினார். மாநில வன்னியர் சங்க செயலாளர் க.வைத்தி, முன்னாள் மாநில துணை பொது செயலாளர் TMT.திருமாவளவன், மாவட்ட தலைவர் அசோகன் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் சமூகநீதி பேரவை தலைவர், பாமக செய்தி தொடர்பாளர், அரியலூர் பெரம்பலூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்,
வழக்கறிஞர் க.பாலு கன்டண பேரூரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில், வன்னியர் சங்க மாவட்ட தலைவர்
தங்க.ராமசாமி, வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் தர்ம.பிரகாஷ்,மற்றும் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், கிளை நிர்வாகிகளும் பாமக-வின் துணை அமைப்புகளான வன்னியர் சங்க நிர்வாகிகளும்,மாணவர் சங்க நிர்வாகிகளும்,இளைஞர் சங்க நிர்வாகிகளும்,உழவர் பேரியக்க நிர்வாகிகளும்,மகளிர் சங்க நிர்வாகிகள், சமூக ஊடக பேரவை நிர்வாகிகளும், தொண்டர்களும் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.
கன்டண ஆர்ப்பாட்டத்தினை தொடர்ந்து, ஜெயங்கொண்டம் வட்டாச்சியரிடம் ONGC ஆழ்துளை எரிவாயு கிணறு மற்றும் விநியோக குழாய் பதிக்கும் பணியை உடனடியாக தடை செய்ய வேண்டியும், ராட்சத குழாய் கிடங்கை உடனடியாக அப்புறபடுத்த வலியுறுத்தியும் மனு கொடுக்கப்பட்டது.