அரியலூர் மாவட்டத்தில் காவல் நிலையங்களில் கொடுக்கப்படும் மனுக்களின் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகளை நேரடியாக மாவட்ட காவல் அலுவலகத்திலிருந்து கண்காணிக்கும் வகையில் PETS ( Petition Enquiry and Tracking System) என்ற செயலியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கா. பெரோஸ் கான் அப்துல்லா அறிமுகப்படுத்தினார். இந்த செயலியில் காவல் நிலையத்திற்கு வரும் மனுதாரர்கள், எதிர்மனுதாரர்கள், மனு விபரம், எடுக்கப்பட்ட நடவடிக்கை ஆகியவை காவல் நிலையத்தில் பணி புரியும் வரவேற்பு அலுவலர்கள் மூலம் உடனுக்குடன் பதிவு செய்யப்படும். மனுக்களின் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து உட்கோட்ட துணை கண்காணிப்பாளர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரடியாக கண்காணிக்க வசதி
செய்யப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில் அரியலூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் விஜயராகவன்( மதுவிலக்கு அமல் பிரிவு), துணைக் காவல் கண்காணிப்பாளர்கள் வெங்கடேசன் (SJ & HR ), சங்கர் கணேஷ்(அரியலூர் உட்கோட்டம்) மற்றும் ரவிச்சந்திரன், துணை காவல் கண்காணிப்பாளர் ( ஜெயங்கொண்டம் உட்கோட்டம்) மற்றும் அனைத்து காவல் நிலைய வரவேற்பு அலுவலர்களும் கலந்து கொண்டனர்.