Skip to content

கொலை வழக்கில்… ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேருக்கு ஆயுள் தண்டனை…

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்தைச் சேர்ந்த சின்னச்சாமி மகன் அறிவழகன்(36/22). வழக்கறிஞரான இவர் கடந்த 2022 ஆம் ஆண்டு முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டார். அன்புச்செல்வன் த/பெ அன்பழகன் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில், 21.02.2022 அன்று உடையார்பாளையம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்த உடையார்பாளையம் காவல்துறையினர், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன், செந்தில்குமார் , செல்வம், மணிகண்டன், நீலாம்பாள், ஆகிய 5 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கின் விசாரணை அரியலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அனைத்து சாட்சிகளும் மற்றும் விசாரணை ஆவணங்களையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு இறுதி கட்ட விசாரணை நடைபெற்று முடிந்த நிலையில், 25.02.2025 இன்று மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி மலர் வாலண்டினா, குற்றவாளிகளான சுப்பிரமணியன், செந்தில்குமார், செல்வம், மணிகண்டன், நீலாம்பாள் ஆகிய 5 பேருக்கும் ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார். இதனைத் தொடர்ந்து குற்றவாளிகள் அனைவரும் திருச்சி மத்திய சிறையில் காவல்துறையினரால் அடைக்கப்பட்டனர்.

error: Content is protected !!