அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் மாவட்ட அளவிலான குழந்தைகள் பாதுகாப்புக் குழுக்கூட்டம் குழுத்தலைவர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா தலைமையில், குழுத் துணைத்தலைவர் / மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி எம்.கிறிஸ்டோபர், தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் பி.சரவணன், மற்றும் குழு உறுப்பினர் / முதன்மை நடுவர் எம்.அறிவு ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கடந்த காலாண்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தனர். இதில் கிராம அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழுக் கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்றும், பாலியல் குற்றங்களினால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் சிகிச்சைகள் மற்றும் ஆற்றுப்படுத்ததுல் பெறுவதற்கு அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குழந்தை நேய சிறப்பு பிரிவு ஏற்படுத்திடவும், பள்ளிகள் ஆரம்ப நேரம் மற்றும் முடிவு நேரங்களில் காவல் துறையினர் ரோந்துப் பணியினை அதிகப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார திட்ட இயக்குநர் லெட்சுமணன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் மு.தர்மசீலன், குழந்தைகள் நல குழுத்தலைவர் செந்தில்குமார், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்ட அலுவலர் அன்பரசி, மாவட்ட சமூக நல அலுவலர் அனுராபூ நடராஜமணி மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.