அரியலூர் மாவட்டம், ஆண்டிமடத்தில் தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தளபதி விஜய் பயிலகம் இன்று திறக்கப்பட்டது.
மாணவர்களிடையே புத்தக வாசிப்பு திறனை மேம்படுத்தவும், பொது அறிவை வளர்த்துக் கொள்ளவும் நடிகர் விஜய் ரசிகர்களால் தற்பொழுது பயிலகம் அமைக்கப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில் அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் ஒன்றியம் தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ஆண்டிமடத்தில் இன்று தளபதி விஜய் பயிலகம் திறக்கப்பட்டது. விஜய் மக்கள் இயக்க அரியலூர் மாவட்ட செயலாளர் மார்டின் டோனி வரவேற்றார். மாவட்டத் தலைவர் சிவா பயிலரங்கத்தை தொடங்கி வைத்தார். இந்த பயிலரங்கத்தில் தலைவர்களின் வாழ்க்கை வரலாறுபுத்தகங்கள் போட்டித் தேர்வுகளில் பங்கேற்க மாணவர்களுக்கு உதவிடும்
வகையில் திறன் அறிவு புத்தகங்கள் மற்றும் ஆறாம் வகுப்பில் இருந்து 12ம் வகுப்பு வரை மாணவர்களுக்கான அனைத்து பாடங்களுக்கும் வினா விடைகள் மற்றும் சிறுவர்களுக்கான கதை புத்தகங்கள் என 1800 புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் பயிலரங்கத்தில் தங்கி குறிப்புகள் எடுத்துக் கொள்ள தேவையான மேஜை வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளது
ஆண்டிமடம் ஒன்றியத்தில் உள்ள சுற்று வட்டார கிராமப்புற மாணவர்களுக்கு இந்த பயிலரங்கம் மிகவும் உபயோகரமாக உள்ளது என்றும், போட்டி தேர்வுகளுக்கு தயார் செய்வதற்கு இந்த நூல்கள் மிகவும் பயனளிக்கும் என்று இப்பகுதி மாணவர்கள் கருத்து தெரிவித்தனர். மேலும் பள்ளி மாணவர்களுக்கு தேவையான வினா விடைகளும் உள்ளது வசதி இல்லாத மாணவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் என்று மாணவர்கள் மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டனர். ஒன்றிய இளைஞரணி தலைவர் அருண்மொழி நன்றி கூறினார். நிகழ்ச்சியில்விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.