அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் நேஷ்னல் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், அரியலூர் மாவட்ட திமுக மாணவரணி சார்பில், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, மாவட்ட அளவிலான பள்ளி மாணவர்களுக்கு பேச்சு மற்றும் கட்டுரை போட்டியினை, போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் துவக்கி வைத்தார்.
இந்நிகழ்வில் கழக சட்டத்திட்ட திருத்தக் குழு இணை செயலாளர் சுபா.சந்திரசேகர், ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன், தலைமை செயற்குழு உறுப்பினர் எம்.பி.பாலசுப்ரமணியன், நேஷனல் கல்லூரி தாளாளர் சிலம்புச்செல்வன், செந்துறை ஒன்றிய கழக செயலாளர்கள் செல்வராஜ் (தெற்கு), எழில்மாறன் (வடக்கு), நகர கழக செயலாளர் வெ.கொ.கருணாநிதி, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் எஸ்.ஆர்.ராமராஜன் மற்றும் மாவட்ட அணி துணை அமைப்பாளர்கள், கல்லூரி பேராசிரியர்கள், இருபால் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள், கழக நிர்வாகிகள், கழகத் தோழர்கள் கலந்துகொண்டனர்.