அரியலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கா.பெரோஸ் கான் அப்துல்லா தலைமையில்“சிறப்பு குறைதீர் முகாம்” நடைபெற்றது.
இந்த முகாமில் மனுதாரர்கள் கலந்து கொண்டு தங்கள் குறைகளை கூறினார்கள். இந்த முகாமில் மொத்தம் 18 மனுக்கள் விசாரிக்கப்பட்டன. மனுதாரர்களின் குறைகளை கேட்டு அதன் மீது தனி கவனம் செலுத்தப்பட்டு, விரைவில் உரிய நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.