அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கா.பெரோஸ்கான் அப்துல்லா உத்தரவின்படி, அரியலூர் மாவட்ட காவல்துறையினர் அரியலூர் மாவட்டம் முழுவதும் வெடி பொருட்களை சட்டவிரோதமாக, அனுமதியின்றி, அனுமதிக்கப்படாத இடங்கள், மற்றும் முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகள் முறையாக பின்பற்றாத இடங்கள் குறித்து சோதனை செய்து வருக்கின்றனர்.
அதன்படி 13.10.2023 இன்று திருமானூர் காவல் நிலைய ஆய்வாளர் பெரியசாமி தலைமையில் காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்ட போது, திருமானூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட குகன்
பட்டாசு கடை உரிமையாளர் அனுமதி பெறாத இடத்தில் சட்ட விரோதமாக வைத்திருந்த 88 மூட்டைகள் நாட்டு வெடிகளும்,
63 அட்டைபெட்டிகளில் சிவகாசி பட்டாசுகளும் பதுக்கி வைத்திருந்தனர். இதன் மதிப்பு ரூ.7,55,000/- ஆகும்.
இதனையடுத்து கணம் கோட்டாட்சியர் அவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, வரவழைக்கப்பட்டு சம்பந்தப்பட்ட இடத்தினை ஆய்வு செய்து, அனுமதி பெறாமல் சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த வெடிகளை பறிமுதல் செய்து, பட்டாசு கடை உரிமையாளர் மற்றும் அதன் மேனேஜர் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு, மேனேஜர் சத்தியமூர்த்தியை(31) கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.