தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் மின் சிக்கன வாரம் கடந்த 14ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. அதனை ஒட்டி அரியலூரில் அண்ணா சிலையில் இருந்து விழிப்புணர் பேரணி தொடங்கியது. பேரணியை அரியலூர் கோட்டாசியர் ராமகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். பேரணி நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று ஒற்றுமை திடலில் முடிவடைந்தது. பேரணியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வாசகங்கள் அடங்கிய பதாகைளை ஏந்தியவாறு ஊர்வலமாக சென்றனர்.